காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி..!

tubetamil
0

கிராந்துருகோட்டே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உல்ஹிடிய பிரதேசத்தில் நேற்று (07) இரவு காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



குறித்த சம்பவத்தில் 57 வயதுடைய உல்ஹிடிய, கிராந்துகோட்டே பகுதியைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.


இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, சம்பவ தினத்தன்று குறித்த நபர் வீட்டுக்கு முன்பாக உள்ள வயல்வௌியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே காட்டு யானை தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம்  தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராந்துருகோட்டே பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top