நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பிரச்சாரம் செய்வதற்கு தனக்கும் தனது கட்சியான ஐக்கிய ஜனநாயகக் குரலுக்கும் போதிய நேரம் கிடைக்கவில்லை என கம்பஹா மாவட்டத்தில் தோற்கடிக்கப்பட்ட வேட்பாளர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.
கொழுப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு பயனுள்ள பிரசாரத்தை மேற்கொள்ள எங்களுக்கு அதிக நேரம் இல்லை என கட்சியின் தலைவரான ராமநாயக்க கூறினார்.
நாங்கள் ஒக்டோபர் 9, 2024 அன்று எங்கள் கட்சியை உருவாக்கினோம்.
22 நாட்கள் மட்டுமே பிரசாரம் செய்தோம், என்று அவர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி இம்ரான் கானின் மேற்கோளைக் குறிப்பிட்டு, “எனது குரலைக் கேட்க எனது மக்கள் கற்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.