வரிசைகள் இல்லாத கடவுசீட்டு விநியோகம் ஆரம்பம் - விஜித ஹேரத்

tubetamil
0

 தற்போது வரிசைகள் இல்லாமலாக்கப்பட்டு கடவுசீட்டு விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.



அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு புதன்கிழமை (06) நடைபெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,


இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது அனுபவம் குறித்து பேசுபவர்கள் ஏற்படுத்திய பிரச்சினையின் விளைவாகவே கடவுசீட்டைப் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் வரிசையில் நிற்கின்றர். எவ்வாறிருப்பினும், இதனை ஓரளவு முகாமைத்துவம் செய்து தற்போது கடவுசீட்டுக்களைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். அதற்கமைய தொகுதி தொகுதியாக கடவுசீட்டுக்கள் கிடைக்கப் பெறுகின்றன.


கடந்த அரசாங்கம் கையெழுத்திட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. 750,000 கடவுசீட்டுக்களை ஒரே சந்தர்ப்பத்தில் பெற்றுக் கொள்வதற்கான இணக்கப்பாட்டை கடந்த அரசாங்கம் எட்டவில்லை. இதன் காரணமாகவே தேவைக்கேற்ப கடவுசீட்டை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.


கடவுசீட்டுக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. தற்போது அவற்றை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தற்போது இணைவழியூடாக விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. அத்தோடு அவசர தேவையின் அடிப்படையில் விண்ணப்பிக்கும் நபர்களுக்கும் உரிய நேரத்தில் கடவுசீட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top