இலங்கையின் அமைச்சரவை அமைச்சுப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் சிலர் இன்றைய தினம் (19) தமது அமைச்சுக்களை பெறுபேற்று கொண்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,
இலங்கையின் புதிய அமைச்சரவைக்கு நேற்று (18) நியமிக்கப்பட்ட 21அமைச்சர்களில் சிலர் கடமைகளைப் பொறுப்பேற்ற நிலையில் இன்றும் சிலர் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளனர்
இதன்படி, வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்ஹ, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக்க, வலுசக்தி அமைச்சர் புண்னிய ஸ்ரீ குமார ஜயகொடி ஆகியோரும் தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளனர்.
அத்துடன் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கே.டி.லால் காந்த, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெதி, கிராமிய அபிவிருத்தி, சமுகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே ஆகிய அமைச்சர்களும் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளதாக குறிப்பிடப்பட்ட்டுள்ளது
அத்துடன் டற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளதாகவு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.