முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையங்கட்டு குளத்தில் நீர்மட்டம் உயர்ந்து வருவது மற்றும் நீரின் வரத்து அதிகரித்ததன் காரணமாக, அதிக நீரை வெளியேற்ற கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய குளங்களில் ஒன்றாக காணப்படுகின்ற முத்தையங்கட்டு குளத்திற்கான நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் முத்தையங்கட்டு குளத்தின் வான்கதவுகள் இன்று (26) பிற்பகல் முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர் சிவபாதசுந்தரம் விகிர்தன், முத்தையன்கட்டு பிரிவு நீர்ப்பாசன பொறியியலாளர் திருமதி மஞ்சுளா ஜொய்ஸ்குமார் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களால் திறந்து விடப்பட்டுள்ளது.
முத்தையன்கட்டு குளமானது 24 அடி வரை நீரை சேமிக்க கூடியதாக இருக்கின்ற நிலையில் தற்போது 17' அடி 6" அங்குலம் வான் கதவுகள் வரை நீர் மட்டம் உயர்ந்த நிலையிலே குளத்தின் 2 கதவுகள் 6 இஞ்சி திறக்கப்பட்டுள்ளன.
எனவே முத்தையங்கட்டு குளத்தின் கீழ் பகுதியில் உள்ள மக்கள் மற்றும் விவசாயிகள் விழிப்புடன் இருந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுகிறோம். எனவும் தாழ்வான பகுதிகளுக்கும், ஆற்றங்கரைகளுக்கும் செல்ல வேண்டாம் எனவும் அவசியமாயின் உயர்ந்த பகுதிகளுக்கு இடம்பெயரவும். பாதுகாப்பிற்காக அதிகாரிகளின் வழிகாட்டல்களை பின்பற்றவும், தொடர்ந்தும் தகவல்களை பெற்றுக்கொள்வதையும் உறுதி செய்யவும் என முல்லைதீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.