சமீபத்தில் வெளிவந்த கங்குவா படத்திற்கு மிகவும் கடுமையான விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிந்தது. கங்குவா படத்திற்கு மட்டுமின்றி இதற்குமுன் சில திரைப்படங்களுக்கு மக்களிடையே கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது.
முதல் காட்சி முடிந்தபின், இந்த விமர்சனங்கள் உடனடியாக YouTube Channel மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளிவருகிறது.
இது குறித்து வெளியான அறிக்கையில், "இந்த 2024 வருடத்தில் இந்தியன் 2, வேட்டையன் மற்றும் கங்குவா திரைப்படங்களுக்கு Public Review மற்றும் Talk மூலம் பெருமளவில் பாதிப்பை YouTube Channel-கள் ஏற்படுத்தியுள்ளன. அவைகளை இனிமேல் ஊக்குவிக்காமல், திரைத்துறையை சார்ந்த அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைந்து இந்த முறையை தடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது".
"அதன் முதல் முயற்சியாக, அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் ரசிகர்களின் பேட்டியை தங்கள் வளாகங்கள் மற்றும் வளாகத்தின் அருகில் எந்த YouTube Channel-களும் எடுக்க தடை செய்து, இந்த FDFS Public Review மற்றும் Talk நடைமுறையை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற ஒத்துழைப்பு தர வேண்டுகிறோம்" என அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.