கேள்விக்குறியாகும் அர்ச்சுனாவின் அமைச்சு பதவி; நீதிமன்ற விசாரணை ஜனவரி 15ஆம் திகதி!

tubetamil
0

 யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக  மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. 


 இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் என தெரிவித்து புதிய சுதந்திர முன்னணியின் தலைவர் ஓஷல ஹேரத்தினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.


 தேர்தல்கள் சட்ட விதிகளுக்கு முரணானது இந்தநிலையில், இந்த மனுவை ஜனவரி 15ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொண்டு உண்மைகளை உறுதிப்படுத்துமாறு  நீதியரசர்கள் இன்று உத்தரவிட்டனர்.


குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கடந்த பொதுத் தேர்தலின் போது அரச வைத்தியராகக் கடமையாற்றிய நிலையில், வேட்பு மனுவை சமர்ப்பித்ததாக மனுதாரர் கோரியுள்ளார்.



அரச சேவையில் இருந்து விலகாமல் இவ்வாறு வேட்புமனுத் தாக்கல் செய்வது சட்டவிரோதமானது எனவும், தேர்தல்கள் சட்ட விதிகளுக்கு முரணானது எனவும் குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 



இதன்படி,  நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் எனப் பிரகடனப்படுத்தி, அந்த ஆசனத்தை செல்லுபடியற்றதாக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top