இயக்குனர் சங்கர் தனது கனவு படமான வேள்பாரி என்ற வரலாற்று நாவலை தளுவி அதே பெயரில் ஒரு வரலாற்று திரைப்படத்தை இயக்கவுள்ளதுடன் அதற்கான ஸ்கிரிப்ட் ரெடி யாக வுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர் இயக்கிய இந்தியன் 2 படம் சொதப்பலான முடிவையே கொடுத்தா நிலையில் அவர் தற்போது ராம்சரண் லீட் கேரக்டரில் நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்தினை இயக்கியுள்ளார்.
இந்த படம் வருகிற பொங்கல் தினத்தை ஒட்டி வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் படத்தின் ரிலீசுக்காக அவர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். நாளைய தினம் இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியும் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து நடிகர் ராம்சரண் உற்சாகமாக வீடியோ வெளியிட்டுள்ளார்
இந்நிலையில் இந்நிலையில் இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட்டு சங்கர் ஈடுபட்டு வருகிறார்.
கேம் சேஞ்சர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக இந்தியன் 3 படத்தின் ரிலீசுக்காக ஷங்கர் செயல்படுவார் என்று தெரிகிறது. இந்த வேலைகளை முடித்துவிட்டு அவர் அடுத்ததாக வேள்பாரி படத்தின் வேலைகளில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கலாம்.
ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் தான் என்ற நிலையில் வேள்பாரி என்ற வரலாற்று நாவலை அவர் எப்படி கொடுப்பார் என்பது குறித்து ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் வேள்பாரி குறித்து பேசியுள்ள ஷங்கர் மிகவும் எனர்ஜெட்டிக்கான நடிகர்களை தேடி வருவதாக கூறியுள்ளார்.