சத்திரசிகிச்சை செய்ய முடியாததால் 54 நோயாளர்கள் உயிரிழப்பு !

tubetamil
0

வவுனியா பொது வைத்தியசாலையில் 2024 ஆம் ஆண்டில் மட்டும் இருதய சத்திரசிகிச்சை செய்ய முடியாத காரணத்தினால் 54 இருதய நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு உயிரிழந்த நோயாளிகளில் 46 பேர் 45 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. 


வவுனியா பொது வைத்தியசாலையில் இருதய சிகிச்சைப் பிரிவு மற்றும் இருதய நோய் வைத்தியர் ஒருவரும் உள்ள போதிலும் போதிய பயிற்சி பெற்ற வைத்தியர்கள், தாதியர்கள், பணியாளர்கள் மற்றும் உபகரணங்கள் இல்லாத காரணத்தினால் இருதய நோய் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்ற வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது.சமீபக் காலமாக இதய நோயினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வரும் சூழல் உள்ளது.

வவுனியா பொது வைத்தியசாலையில் உயிரிழந்த 54 இருதய நோயாளர்கள்! அதிர்ச்சி தகவல் | 54 Cardiac Patients Died Vavuniya General Hospital

வவுனியா பொது வைத்தியசாலையில் பல கோடி ரூபா செலவில் இதய நோய் பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டாலும் அதனை கண்டறியும் ஆஞ்சியோகிராம் பரிசோதனைக்கு தேவையான உபகரணங்கள் வவுனியா பொது வைத்தியசாலைக்கு வழங்கப்படவில்லை.

இந்நிலைமையால் நோயாளர்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதோடு சகல சத்திர சிகிச்சைகளையும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையிலேயே மேற்கொள்ள வேண்டியுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top