சரிகமபவில் 60 களின் பாடலை பாடிய திவினேஷ் மற்றும் தியா - பணம் கொடுத்து ஆசீர்வதித்த நடுவர்!

tubetamil
0

 சரிகமப நிகழ்ச்சியில் சீசன் 4 வின் லிட்டில் சாம்பியன்ஸ் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டூயட் சுற்றில் போட்டியாளர்கள் பாடல் பாடி அசத்தி வருகின்றனர். இதில் போட்டியாளர் திவினேஷின் பாடல் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.



இந்நிலையில்  26 போட்டியாளர்கள் பங்குபற்றியுள்ள இந்த சீசனில் ரண்டு சுற்றுக்கள் முடிவடைந்து தற்போது மூன்றாவது சுற்றாக டூயட் சுற்றில் போட்டியாளர்கள் இருவர் இருவராக பாடி வருகின்றனர்.


இன்றைய எபிசோட்டில் திவினேஷ் மற்றும் தியா நயன் பாடிய பாடல் அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியது. சுமார் 60 களில் வந்த பாடல்களை இன்றும் அதன் புதுத்தன்மை மாறாதவாறு பாடியுள்ளனர்.


அவர்கள் பாடிய பாடல் 'மலர்ந்தும் மலராத' என்ற எம்.எஸ்.வி இன் பாடலாகும். இந்த பாடலை கேட்டு நடுவரான ஸ்வேதா மோகன் எழுந்து வந்து இரண்டு போட்டியாளர்களையும் கட்டியணைத்து அழுதபடியே பாராட்டினார்.



அடுத்து நடுவர் ஸ்ரீனிவாஸ் தியா நயன் மற்றும் திவினேஷை பாராட்டியதோடு இவர்களின் பாடலுக்கு நான் ஏதாவது ஒன்று கொடுக்க வேண்டும் மேடைக்கு எழுந்து வந்து பணம் கொடுத்து ஆசீர்வதித்துள்ளார். 





கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top