கடந்த அரசாங்கங்களில் மந்தகதியில் விசாரிக்கப்பட்ட முன்னாள் அரசியல்வாதிகள், முக்கியஸ்தர்கள், அரச உயர் அதிகாரிகள் தொடர்பான பல வழக்குகள் தொடர்பில் புதிய முறையில் விசாரணைகளை ஆரம்பிக்க குற்றப் புலனாய்வு திணைக்களம், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உள்ளிட்ட விசேட பொலிஸ் பிரிவுகள் தீர்மானித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் விசேட பொலிஸ் பிரிவின் அதிகாரிகள் இது தொடர்பான வழக்கு கோப்புகளின் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை தற்போது நீதிமன்றங்களில் இருந்து பெற்று வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, இது தொடர்பான பல வழக்குகள் தற்போது கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் மற்றும் கோட்டை நீதவான் நீதிமன்றம் உட்பட பல நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
சில விசாரணைகளை முடித்துவிட்டு சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக விசாரணை கோப்புகள் சட்டமா அதிபருக்கு அனுப்பி பல வருடங்கள் கடந்துள்ளது.
இந்த நிலையில் சட்டமா அதிபரின் ஆலோசனைகள் கிடைக்கப்பெறாத பல வழக்குகள் உள்ளதாக நீதிமன்றில் தெரியவந்துள்ளது.