அநுராதபுரம் - திருகோணமலை ஏ12 வீதியில் மிகிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புஞ்சிக்குளம் சந்திக்கு அருகில் இன்று இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மிகிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் மிகிந்தலை - கம்மலக்குளம பிரதேசத்தில் வசித்து வந்த ஜே.மதுக சங்கீத் ஜயசுந்தர என்ற 27 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவருக்கு அடுத்த மாதம் மாதம் திருமணம் நடைபெறவிருந்து.
குறித்த விபத்து தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மிகிந்தலையில் இருந்து அனுராதபுரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக விசாரணை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது அநுராதபுரத்தில் இருந்து மிகிந்தலை நோக்கி சொகுசு ஜீப் ஒன்று பயணித்ததாகவும், பலத்த காயங்களுக்கு உள்ளான குறித்த இளைஞனை அந்த வாகனத்தில் ஏற்றி அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தவர் ஜீப் வண்டியுடன் மோதினாரா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மிகிந்தலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சந்திரசிறி ரஞ்சித்தின் பணிப்புரையின் பேரில் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் குழு விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.