சகோதரர் கொலை செய்யப்பட்டதாக அவுஸ்திரேலிய குடும்பம் குற்றச்சாட்டு!!

tubetamil
0

 கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் 7வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த வெளிநாட்டவர், கொலை செய்யப்பட்டுள்ளதாக குடும்பத்தினரால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உறவினர்கள் இதனை தெரிவித்துள்ளனர். தமது சகோதரரின் மரணத்திற்கு இலங்கை நீதி வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 6ஆம் திகதி 51 வயதான அவுஸ்திரேலிய நபர் ஒருவர் கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் 7வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துள்ளார்.

இலங்கையில் தமது சகோதரர் கொலை செய்யப்பட்டதாக அவுஸ்திரேலிய குடும்பம் குற்றச்சாட்டு | Australian Dies In Kollupitiya Family Suspect

சகோதரின் மரணத்தை அடுத்து இலங்கை வந்த அவரது தாய், சகோதர, சகோதரிகள் அவர் தொடர்பான தகவல்களை தேடியுள்ளனர். இந்நிலையில் சகோதரர் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என தெரிவித்துள்ளனர். 

இதேவேளை குறித்த நபர் மாடியிலிருந்து குதிப்பதை தடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்தபோதும் அது பலனளிக்கவில்லை.

இலங்கையில் தமது சகோதரர் கொலை செய்யப்பட்டதாக அவுஸ்திரேலிய குடும்பம் குற்றச்சாட்டு | Australian Dies In Kollupitiya Family Suspect

இந்நிலையில் உயிரிழந்த வெளிநாட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top