லாஃப் எரிவாயு நிறுவனத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

tubetamil
0

 லாஃப் நிறுவனம், எரிவாயுவை இறக்குமதி செய்து வழங்குவதில் தலையிடத் தவறினால், அரசாங்கம் ஒரு முடிவை எடுக்க நேரிடும் என என  வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.



இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 


லிட்ரோ எரிவாயு கையிருப்பு போதுமானதாக இருப்பதால், லாப் எரிவாயு நுகர்வோர் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காண எரிவாயு கொள்கலன்களை மாற்ற வேண்டும் என்றால், அது குறித்து அரசு விரைவில் முடிவெடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


குறித்த இதே வேளை 


கடந்த செப்டெம்பர் மாதத்திலிருந்து லாஃப் எரிவாயு சந்தைக்கு வெளியிடப்படவில்லையென எரிவாயு விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


நாட்டில் சில வாரங்களாக லாஃப் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நுகர்வோர் மற்றும் வியாபாரிகளும் சிரமப்படுகின்றனர்.


அதன்படி, லாஃப் எரிவாயு நிறுவனத்திடம் இதுகுறித்து விசாரித்தார்.


பிரதான நிரப்பு முனையத்தின் இருப்பிடமான மாபிமாவைச் சுற்றியுள்ள பகுதி வெள்ளத்தில் மூழ்கி விநியோகம் முடக்கப்பட்டுள்ளது. 


அதே நேரத்தில் அம்பாந்தோட்டை முனையத்திற்கு எரிவாயு கொண்டு வரும் கப்பலில் தாமதம் ஏற்பட்டது. 


இதன் காரணமாக எரிவாயு விநியோகிக்க முடியவில்லையென அந்நிறுவனம் தெரிவித்துள்ளமாய் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top