வடமாகாணத்தில் சிறந்த விவசாயிகள் மற்றும் சிறந்த பண்ணையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு

tubetamil
0

 வடமாகாண  விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் வடமாகாணத்தில் சிறந்த விவசாயிகள் மற்றும் சிறந்த பண்ணையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது. 



வடமாகாண விவசாயப்பணிப்பாளர் சுகந்தினி செந்தில்குமரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் கலந்து கொண்டார். 



குறித்த நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர், விவசாய அமைச்சிற்கு கீழுள்ள திணைக்களங்களின் பணிப்பாளர்கள், யாழ் பல்கலைக்கழக விவசாய பீட பீடாதிபதி பேராசிரியர் க.பகீரதன்,ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த விவசாய மற்றும் கால் நடை, நீர்ப்பாசன திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.



வடமாகாண விவசாய அமைச்சின் அறுவடை இதழும் வெளியீட்டு வைக்கப்பட்டது. ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய சிறந்த விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்கள் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top