தெறி படம் அளவுக்கு சூப்பர் இல்லை! - பேபி ஜான் படத்திற்கு ட்விட்டரில் வெளியான விமர்சனம்!

tubetamil
0

 தமிழ் சினிமாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான திரைப்படம் தான்  தெறி.



 இந்த திரைப்படத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், மொட்ட ராஜேந்திரன், ராதிகா உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். 


அத்துடன்  இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. 


குறித்த இதே வேளை பேபி ஜான்: இந்த திரைப்படம் தற்போது ஹிந்தியில் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு பேபி ஜான் என்று பெயரிடப்பட்டுள்ளது. 



மேலும் அட்லியின் மனைவி பிரியா ஏ பார் ஆப்பிள் என்கின்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக இப்படத்தை தயாரித்து இருக்கின்றார். அட்லியின் உதவி இயக்குனர்களில் ஒருவரான காலிஸ் என்பவர் இப்படி இயக்கி இருக்கின்றார்.



இந்த திரைப்படத்தில் விஜய் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகரான வருண் தவான் நடித்துள்ளதுடன்  மேலும் சமந்தா கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ், எமி ஜாக்சன் கதாபாத்திரத்தில் வாமிகா கபி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.






 மேலும் இந்த திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கிரண் கௌஷிக் பணியாற்றி இருக்கின்றார். மேலும் தமன் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கின்றார். ள்.



பேபி ஜான் திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று ஹிந்தியில் வெளியாகி இருக்கின்றது. தெறி திரைப்படத்தின் ரீமேக் என்பதால் இந்த திரைப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்துள்ளதா என்பதை ட்விட்டரில் விமர்சனமாக ரசிகர்கள் தெகருத்து வெளியிட்டுள்ளனர். 



குறித்த இதேவேளை இந்த திரைப்படத்தில் பலர் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். அதாவது இந்த திரைப்படத்தில் சல்மான் கான் கேமியோ ரோலில்  நடித்திருக்கின்றார்.



இது பாலிவுட் சினிமாவில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. ஏஜென்ட் பாய் ஜான் என்கின்ற கதாபாத்திரம் யாருமே எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட்டாக இப்படத்தில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.



குறித்த இதேவேளை இந்த படத்துக்கு சிட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் தெறி பட அளவிற்கு சிறப்பாக இல்லை என்று சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். வருண் தவான் நடிப்பு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. தெறி படத்தின் கதையில் சில மாற்றங்கள் இருக்கின்றது. மேலும் தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷின் நடிப்பும் சிறப்பானதாக இல்லை என்று சிலர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top