இராணுவ நினைவுச் சின்னத்தை அகற்றுங்கள்!

tubetamil
0

 கிளிநொச்சி டிப்போ சந்தியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ நினைவுச் சின்னம் அகற்றப்பட்டு கலாச்சார மண்டபம் அமைக்கப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசு கட்சியின்நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு கருத்து வெளியிட்ட அவர், ”கிளிநொச்சி டிப்போ சந்தியில் ஒரு இராணுவ நினனைவுச் சின்னம் உள்ளது. டிப்போவிற்கு பின்னால் இரண்டு ஏக்கர் காணி இராணுவத்தின் வசமுள்ளது.

தற்போது பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதியில் முன்னாள் அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரனால் மிகப்பெரிய கலாசார மண்டபம் அமைக்கப்பட்டிருந்தது. அதனை இராணுவம் தான் இடித்து அழித்தது.

தமிழர் பகுதியில் உள்ள இராணுவ நினைவுச் சின்னத்தை அகற்றுங்கள் - சிறீதரன் எம்.பி கோரிக்கை | Shritharan Mp Requests Remove Of Military Memorial

கிளிநொச்சி டிப்போவிற்கு பின்னால் உள்ள காணியின் இரண்டு ஏக்கர் நிலத்தை மாவட்ட செயலகத்தின் ஊடாக பெற்று, இராணுவ சின்னம் அகற்றப்பட்டு அதில் முன்னாள் அமைச்சர் சந்திரசேகரனின் பெயரில் ஒரு கலாசார மண்டபம் அமைக்கப்பட வேண்டும்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் இந்த நகரப் பகுதிக்குள் இவ்வாறு காணிகள் இராணுவத்திற்கு தேவையில்லை” என தெரிவித்தார்.

இந்த நிலையில் அதற்கு பதிலளித்த கடற்றொழில் அமைச்சர், “காணி உரிமை கோருபவர்களது மத்தியில் பல்வேறு குளறுபடிகள் இருக்கின்ற நிலையில் கிராம சேவகர்கள் உண்மையான காணி உரிமையாளர்களை கண்டுபிடிக்க முடியும்“ என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top