ராவணனாக நடிக்க யாஷ் இற்கு எவ்வளவு கோடி சம்பளம் தெரியுமா?

tubetamil
0

 தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் யாஷ், தற்போது பான் இந்தியா படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கே.ஜி.எஃப் சீரிஸின் வெற்றிக்குப் பிறகு, யாஷின் மார்க்கெட் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில், இந்திய சினிமாவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் படத்தில் ராவணனாக நடிக்கும் யாஷ், எத்தனை கோடி சம்பளம் பெறுகிறார் என்ற கேள்வி பலரது மனதில் எழுந்துள்ளது.




ராமாயணம் படத்தில் ராவணனாக நடிக்க யாஷ் ரூ.200 கோடி சம்பளம் பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய சினிமாவில் ஒரு வில்லன் கதாபாத்திரத்திற்கு இவ்வளவு அதிக சம்பளம் வழங்கப்படுவது இதுவே முதல் முறை.


சுமார் ரூ .835 கோடி பட்ஜெட்தில் உருவாகும்  இந்த படத்தில் ராமராக ரன்பீர் கபூர் மற்றும் சீதையாக சாய் பல்லவி நடிக்கின்றமை  குறிப்பிடத்தக்கது. 


கைகேயியாக லாரா தத்தா, அனுமனாக சன்னி தியோல் மற்றும் மந்தரையாக  ஷீபா சத்தா ஆகியோரும் நடிக்கின்றனர்.


இந்நிலையில் ராமாயணம் படம், கே.ஜி.எஃப் படத்துக்கு பிறகு யாஷின் திரையுலக பயணத்தில் மீண்டும் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top