நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது மர்ம கும்பல் ஒன்று கல்லெறிந்து தாக்குதல் தாக்குதல் நடத்தியதில் பதற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
டிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் நடிப்பில் புஷ்பா 2 படம் கடந்த 5ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி கடந்த சில தினங்களிலேயே 1500 கோடிகளுக்கும் மேல் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் வசூலித்துள்ளது.
இந்நிலையில் படத்தின் பிரீமியர் ஷோ கடந்த 4ம் தேதி ஐதராபாத்தின் சந்தியா திரையரங்கில் நடந்த நிலையில் அங்கு அல்லு அர்ஜுன், ராஷ்மிகாவை பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூடினர். கூட்ட நெரிசலில் ரேவதி என்ற ரசிகை உயிரிழந்துள்ளார்.
இந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு சக நடிகர்கள் மிகப் பெரிய அளவில் ஆதரவு தெரிவித்து வருவதாகவும் ஒன்றன்பின் ஒருவராக அவரது வீட்டில் சென்று பார்த்து வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் தெலுங்கானாவின் ஏசிபி, டிஜிபி உள்ளிட்டவர்கள் இந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுனை தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றனர்.
அத்துடன் நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த அல்லு அர்ஜுன் இந்த விவகாரத்தில் தன்னை சிலர் குற்றம் சாட்டி வருவதாக வருத்தம் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த சம்பவத்தில் உயிரிழந்த ரேவதி குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வலியுறுத்தி ஓஸ்மானியா பல்கலைகழக மாணவர்கள் அல்லு அர்ஜுனின் வீட்டின் மீது கல்லெறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் சுற்றுசுவர் மீது ஏறி அங்கிருந்த பூந்தொட்டிகளையும் அவர்கள் உடைத்ததாக தெரிகிறது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.