மலையாள சின்னத்திரையின் பிரபலமான முகமாகத் திகழ்ந்த நடிகர் திலீப் ஷங்கர் திடீரென மறைந்த செய்தி, தென்னிந்திய சினிமா உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழில் பெரும் வரவேற்பைப் பெற்ற "சுந்தரி" சீரியலின் மலையாள வடிவில் நடித்து பிரபலமான இவர், தனது 47 ஆவது வயதில் காலமானார்.
திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த திலீப் ஷங்கர், சில நாட்களாக வெளியே வராததால் ஹோட்டல் ஊழியர்கள் அவரது அறைக்குச் சென்று பார்த்தபோது, அவர் உயிரிழந்த நிலையில் கிடந்தார். உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
குறித்த இதே வேளை திலீப் ஷங்கர், தற்போது "Panchagni" என்ற சீரியலில் நடித்து வந்தார். ஷூட்டிங்கில் இருந்து இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு, ஓய்வெடுக்க ஹோட்டலில் தங்கியிருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
திலீப் ஷங்கரின் மரணம், அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல், சினிமா உலகினரையும் ஆழ்ந்த சோகத்துக்குள்ளாக்கியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.