தமிழ் மக்களும் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு வாக்களித்து அவரை வெல்ல செய்துள்ளோம் என்று சீன தூதுவர் கூறிய கருத்து நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சமாசத்தின் உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
இன்று யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இன்று எங்களின் நாடு வடக்கு கிழக்கு அரசியல் ஒரு வழியாக போய் கொண்டிருக்கிறது. சீனாத்தூதுவர் வடக்கு கிழக்கில் எல்லா இடமும் வந்து பார்த்து கடைசியாக அவர் ஒரு வசனத்தை சொல்லிவிட்டு போயிருக்கிறார். தமிழ் மக்களும் அனுர குமார திசாநாயக்க ஒரு மாற்று வழியை விரும்பியிருக்கிறார். அதனால் இங்கேயும் வந்து அனுரகுமார திஸாநாயக்கவுக்கு வாக்களித்து அவரை வெல்ல செய்திருக்கிறார்கள். இதனை நாங்கள் வரவேற்கிறோம். என அவர். தெரிவித்துள்ளார். இதனை நாங்கள் ஏற்க மாட்டோம். எண்களின் அரசியல் வாதிகள் சரியாக நடந்திருந்தால் இப்படியான கேவலமான கதைகளும் வந்திருக்காது.
ஏனென்றால் சீனா ஏற்கனவே இங்கே வந்து காலூன்றி விட்டது. எல்லா இடங்களிலும் அட்டை பண்ணையை போட்டு விதித்தது. அதற்கு நாங்கள்தான் முதன்முதலில் எதிர்ப்பு தெரிவித்தோம்.
இன்று சீனா திரும்புப்பியும் சில சில இடங்களில் காலூன்றுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றது. சீனாத்தூதுவரின் கருத்திநூடாக என்ன மாற்றம் இடம்பெற போகிறது என எங்களினுடைய மக்கள் தான் யோசிக்க வேண்டும்.
மன்னாரில் மண்ணகளலால் அந்த பிரதேசம் தாண்டு போயுள்ளது. இவையெல்லாம் வெளிநாட்டு அரசாங்கம் இலங்கையிலுள்ள அரசோடு ஒத்தூதி அவர்களினூடாக செய்து கொண்டு போகிறார்கள். இதற்கு நாங்கள் இடம் கொடுப்போமாக இருந்தால் எங்களினுடைய இடங்களும் பறிபோய் நாங்களும் எங்கேயோ பொய் நிற்க வேண்டிய கட்டமும் வரும் என அவர் தெரிவித்துள்ளார்.