சொந்த மண்ணில் நியூஸிலாந்தை வெள்ளையடிக்க காத்திருக்கும் இங்கிலாந்து....

tubetamil
0

 இங்கிலாந்து அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டி நேற்று  ஆரம்பமானது.

இந்தநிலையில் நேற்றைய முதல் நாள் ஆட்டமுடிவின்போது, தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் நியூஸிலாந்து அணி, 9 விக்கட்டுக்களை இழந்து 315 ஓட்டங்களை பெற்றது.

டொம் லாதெம் 63 ஓட்டங்களையும், மிட்செய்ல் சான்ட்னர் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.


பந்துவீச்சில் இங்கிலாந்தின் பொட்ஸ் மற்றும் எட்கின்சன் ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களை கைப்பற்றினர்.

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடரவுள்ளது.

ஏற்கனவே இ;டம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top