முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் கரைஒதுங்கிய வெளிநாட்டு பயணிகள் கப்பல்!

tubetamil
0

 முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில்  வெளிநாட்டு பயணிகள் அடங்கிய கப்பல் ஒன்று கரைஒதுங்கிய சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.


முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரைப்பகுதியில் மியன்மாரில் இருந்து 103 பயணிகளுடன் கப்பல் ஒன்று திசைமாறி வந்துள்ளது. குறித்த கப்பலில் 25மேற்பட்ட சிறுவர்களும்  உள்ளடங்கியிருக்கின்றனர்.அவர்களை  மீட்டு கரைக்கு  கொண்டுவரும் நடவடிக்கையில்  முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர்,  கடற்படையினர், இராணுவத்தினர், பொலிஸார் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த கப்பலில் இருப்பவர்களுக்கு  உணவுகள், உலருணவுகளை  முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர்  வழங்கியிருக்கின்றார்கள், அதில் சிலர்  மயக்கநிலையிலும், சுகவீனமுற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.







கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top