பனை அபிவிருத்திச் சபையின் எதிர்கால திட்டங்கள் தொடர்பான ஆய்வுகள் எடுக்கப்பட்டு பொருத்தமான முடிவுகள் எடுக்கவேண்டும் என பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன பணித்துள்ளார்.
பெருந்தோட்ட அமைச்சில் தொடர்புபட்ட நிறுவனங்களில் அபிவிருத்தி தொடர்பான கலந்தாய்வு கூட்டம் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தலைமையில் இன்று அமைச்சில் நடைபெற்றது.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நேற்று பிற்பகல் 2 மணி தொடக்கம் 6.10 வரை இடம்பெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு அடிப்படை விடயங்கள், பணியாளர் சம்பந்தப்பட்ட விடயங்கள், ஏற்றுமதி தொடர்பான விடயங்கள், பனையின் அழிவு சம்பந்தமான விடயங்கள், கற்பகச்சூலை தொடர்பான விடயங்கள், என்பவை ஆய்வு செய்யப்பட்டன.