முன்னாள் எம்.பி திடீர் கைது!

tubetamil
0

முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான குலசிங்கம் திலீபன் இன்று காலை வவுனியா மாவட்ட நிதி மோசடி குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளாரும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளருமான கிறிஸ்டோபர் டினேஸ் என்பவரை நேற்றைய தினம் இரவு வவுனியா மாவட்ட நிதி மோசடி குற்றப்பிரிவினர் காசோலை மோசடி முறைப்பாட்டில் கைது செய்திருந்தனர்.

முன்னாள் எம்.பி திலீபன் கைது; நடந்தது என்ன? | Former Mp Thileepan Arrested What Happened

அவர் வழங்கிய வாக்குமூலத்தை தொடர்ந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் இன்று காலை வவுனியா மாவட்ட நிதி மோசடி குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் நிதி மோசடி குற்றத்தடுப்பு பிரிவினர் அவரிடம் விசாரனைகளை முன்னெடுத்த பின்னர், இன்று அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top