கலர்ஸ் தமிழ் சேனல் அடுத்தடுத்து பிரம்மாண்டமான தொடர்களை களமிறக்கி வரும் நிலையில் அந்த வரிசையில் மிகவும் பிரம்மாண்டமாக அதிகமான சுவாரஸ்யங்களோடு திங்கள் முதல் வெள்ளி வரை தினந்தோறும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது சிவசக்தி திருவிளையாடல் என்ற தொடராகும்.
ஆன்மிக புராண தொடரான சிவசக்தி திருவிளையாடல் தொடர் கடந்த ஜூன் மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் ஆன்மிக புராண தொடர்கள் ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப கொடுத்துவரும் நிலையில் அந்த வரிசையில் சேனலில் திங்கள் முதல் வெள்ளி வரை தினந்தோறும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் சிவசக்தி திருவிளையாடல் தொடர் மிகப்பெரிய கவனத்தை பெற்றுவருகின்றது.
இதனால் கோபமடையும் சிவன், நடராஜர் அவதாரம் எடுத்து அபஸ்மரனை அழிக்க நினைக்கிறார். ஆனால் அமஸ்மரனை அழித்தால் பிரபஞ்சம் சமநிலை இழக்கும் அபாயம் இருப்பதால், அவனை அழிக்காமல் தான் காலுக்கு அடியில் அழுத்தி வைக்கிறார் நடராஜர். இதனிடையே, அபஸ்மரனை நடராஜரிடம் இருந்து விடுவிக்க அசுர குரு சுக்ராச்சாரியார் யோசனை அளிக்கிறார். அதன்படி அறுபதாயிரம் சூர்ய புத்திரர்களின் அஸ்தியைக் கொண்டு ஆயுதம் தயாரிக்க அறிவுறுத்துகிறார். ஏற்கனவே அறுபதாயிரம் அஸ்தி தயாராக உள்ளது குறித்தும் கூறுகிறார். முன்னொரு காலத்தில் சாகரன் செய்த அஸ்வமேத யாகம் குறித்தும் அவர் விளக்குகிறார்.
சாகரனின் இந்த யாகத்தை முறியடிக்க சூழ்ச்சி செய்யும் இந்திரன், அவனது 60 ஆயிரம் முதல்வர்களும் கபில முனிவரின் சாபத்தில் எரிந்து சாம்பலாகும்படி செய்ய அந்த அஸ்தி மூலம் ஆயுதம் தயாரிக்க திட்டமிட சுக்ராச்சாரியார் அறிவுறுத்துகிறார். மறுபுறம் சூர்ய குலத்தைச் சேர்ந்த பகீரதன் தன் முன்னோர்கள் அறுபதாயிரம் பேருக்கும் மோட்சம் கிடைக்க பிரம்மதேவரை நோக்கி தவம் இருக்கிறார். பகீரதனுக்கு வரம் கொடுக்க பிரம்ம தேவரும் முடிவெடுக்க, பிரம்மனின் கமண்டலத்தில் இருந்து கங்கையை பூமிக்கு அனுப்ப கோருகிறான் பகீரதன். கங்கையின் வேகத்தை பூமியால் தாங்க முடியாது என்று பிரம்மா தயங்க. தன் ஜடாமுடியால் தான் கங்கையை தாங்குவதாக கூறி பிரம்மாவை வரம் தரச் சொல்கிறார் சிவபெருமான். கங்கை பூமிக்கு வந்து அசுரர்களின் திட்டத்தினை முறியடிப்பதாக இந்த வார எபிசோட்கள் காணப்படுகின்றன.
சிவன் பார்வதியை அழிக்க இருந்த அனைத்து மார்க்கமும் அடைபடும் நிலையில், அசுர மாதா திதி, சூர்ய புத்திரனான சனி தேவனை நாடுகிறார். அவரது சூழ்ச்சியால் சனிபகவான் சிவன் பார்வதியின் குடும்பத்திற்கு எதிராக திரும்புவதாகவும் இந்த வார எபிசோட்கள் காணப்படுகின்றன. கார்த்திகேயனை சனியின் பிடியில் சிக்கவைத்து, கார்த்திகேயனை சிவனுக்கு எதிராக அவர் திருப்புகிறார். இதனால் கைலாயத்தில் பிரச்னை உருவாகிறது. அவரது இந்த சூழ்ச்சியை சிவன் முறியடிப்பாரா? கார்த்திகேயன் சனியின் பிடியிலிருந்து விடுபடுவாரா? அடுத்து என்ன நடக்கும் என்ற விறுவிறுப்புடன் இந்த வாரத்தின் எபிசோட்கள் நகர்ந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.