இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல சபாநாயகர் பதவி விலகியதை அடுத்து, சபாநாயகர் பதவிக்காக மூன்று பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக அரசியல் தரப்புகள் தெரிவிக்கின்றன.
பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலிஹ், நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுன ஆராச்சி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி ஆகியோரின் பெயர்களே புதிய சபாநாயகராக பதவியேற்பதற்கான வேட்பாளர்களாக முன்மொழியப்பட்டுள்ளன.
இந்தநிலையில், நாடாளுமன்றம் பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலிஹ் தலைமையில் டிசம்பர் 17 ஆம் திகதி மீண்டும் கூடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்போது, புதிய சபாநாயகர் நியமனம் அரசியலமைப்பு நெறிமுறைகளுக்கு இணங்க அன்றைய தினம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து, அதனை தற்போதைக்கு நிரூபிக்க முடியாத நிலையில், அவர் பதவி விலகினார்.