எதிர்வரும் மார்ச் மாதம் வரை தேங்காய் விளைச்சல் குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அதனடிப்படையில் தேங்காய் தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்து, விலை உயர்வும் தொடரும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாந்த ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தேங்காய் தட்டுப்பாட்டால், கைத்தொழில் துறையும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல தொழிற்சாலைகளுக்கு தேங்காய் முக்கிய மூலப்பொருளாக இருப்பதால், தேங்காய் தட்டுப்பாடு காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டு, பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. பொதுமக்கள், தேங்காய் மற்றும் தேங்காய் பொருட்களை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலைமைக்கு தீர்வு காணும் வகையில், அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அரசாங்கத்திற்கு சொந்தமான தென்னந்தோப்புகளில் விளையும் தேங்காய்களை சதொச நிறுவனம் மூலம் நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.