இலங்கையில் 12 லட்சம் ரூபாய்க்கு இறக்குமதி செய்ய முடியும் என்று கூறப்பட்ட ஜப்பானிய விட்ஸ் (Toyota Vitz) வகை கார், தற்போது அரசாங்கத்தின் அதிகமான வரிகளால் பொதுமக்கள் வாங்க முடியாமல் போயுள்ள நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார அதற்கான காரணத்தைத் தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வசந்த யாப்பா பண்டார கருத்து தெரிவிகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் கூறியதாவது, "முகநூல் பிரச்சாரங்களில் 12 லட்சம் ரூபாய்க்கு ஒரு விட்ஸ் கார் வாங்க முடியும் என நளின் ஹேவகே தெரிவித்துள்ளார். இதனால், மக்கள் அதை நம்பி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு வாக்களித்தார்கள்."
எனினும், அவற்றின் வரி பொருத்தமானதாக இல்லாமல், நாட்டின் பிரபலமான விட்ஸ் கார் தற்போது 70 லட்சம் முதல் 80 லட்சம் ரூபாய்வரை வரி வசூலிக்கப்பட்டு விற்கப்படுகிறது. இதனால், பொதுமக்களுக்கு கார்கள் வாங்குவது சாத்தியமற்றதாக உள்ளது என அவர் கூறினார்.