2024 ஆம் ஆண்டிற்கான ஐ.சி.சி ஆண்கள் ஒருநாள் கிரிக்கட் அணியில் இலங்கை அணி சார்ந்த நான்கு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
சரித் அசலங்க, பதும் நிசங்க, குசல் மெண்டிஸ் மற்றும் வனிந்து ஹசரங்கா ஆகியோரே குறித்த சாதனையை படைத்துள்ளனர்
பதும் நிசங்க, கடந்த 12 போட்டிகளில் 694 ஓட்டங்களைப் பெற்றார், இதில் 3 சதங்கள் மற்றும் 2 அரை சதங்கள் அடங்குகின்றன.
குசல் மெண்டிஸ் 17 போட்டிகளில் 742 ஓட்டங்களை பெற்று, அதில் 1 சதம் மற்றும் 6 அரைசதங்கள் அடங்குகின்றன.
சரித் அசலங்க 16 போட்டிகளில் 605 ஓட்டங்களை பெற்றுள்ளார், இதில் 1 சதம் மற்றும் 4 அரைசதங்கள் அடங்கின்றன.
வனிந்து ஹசரங்கா 10 போட்டிகளில் 26 விக்கெட்டுகளைப் பெற்றார், மேலும் 19 ஓட்டங்களில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றிய அவரது சிறந்த பந்துவீச்சு கவனத்தைத் தார்கின்றது.
இலங்கை அணியின் நான்கு வீரர்களும் உலகளாவிய ஒருநாள் போட்டிகளில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி, இந்த அரிய சாதனையைப் பெற்றுள்ளார்கள்.