இலங்கையின் வெளியுறவுத்துறையில் பெண்களின் பங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கட்டாருக்கான இலங்கைத் தூதுவராக ரோஷன் சித்தாரா கான் அசாத் பொறுப்பேற்றுள்ளார்.
ரோஷன் சித்தாரா கான் அசாத் என்ற பெண்ணே குறித்த பதவியினை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவர் அசாத், 1998 ஆம் ஆண்டு வெளியுறவு சேவையில் சேர்ந்தார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் உட்பட பல்வேறு துறைகளில் உயர் பதவிகளை வகித்துள்ளார். லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனுக்கான மேலதிக செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். இவ்வளவு அனுபவம் கொண்ட ஒருவர் கட்டாருக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது