யாழ். மக்கள் கட்டாயமாக பயப்பட தேவையில்லை என யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்துள்ளார். கொலைவெறித் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, நான்கு குற்றவாளிகளைக் கைது செய்து, சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், எதிர்காலத்தில் குற்றச்செயல்களைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதே வேளை யாழ்ப்பாணத்தில் இளைஞர் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல் தொடர்பாக அவர் தெரிவிக்கையில் , சுற்றுப்புறங்களில் ஏற்பட்ட அச்சத்தை குறைப்பதற்காக பொலிஸார் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த வாரத்தில் நடந்த வன்முறைச் சம்பவம், பொதுமக்கள் மத்தியில் ஒரு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கூடாக, குறித்த சம்பவங்களை ஆராய்வதற்காக புலனாய்வு நடவடிக்கை நடத்தி, இதில் ஈடுபட்ட நான்கு குற்றவாளிகளை கைது செய்துள்ளமையும், குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை எதிர்காலத்தில் பிடிக்க நீதிமன்றத்துக்கு முற்றுப்புள்ளி செய்ய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகள் எதிர்காலத்தில் அதிக தண் டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்ற ஆணையில் குற்றவியல் சட்டக் கோவையின் 81 ஆவது பிரிவின் கீழ் வழக்குத் தாக்கல் செய்து வருகின்றோம் எனவும் தெரிவித்ததுடன் இந்த நிலவரத்தில் மக்கள் அச்சமின்றி வாழ முடியும் என பொலிஸாரும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.