சென்னையை வெள்ளக்காடாக்கும் திட்டங்களை நிறுத்த வேண்டும் - நடிகர் விஜய் தெரிவிப்பு

tubetamil
0

 நமது முதல் மாநில மாநாட்டில் நான் கூறிய ஒரு முக்கிய கொள்கை, இயற்கை வளப் பாதுகாப்பு மற்றும் சூழலியல் பற்றியது. அதில் நான் கூறியது, சுற்றுச்சூழலை பாதுகாப்பதும், விவசாய நிலங்களை காக்கும் முனைப்பும் கடுமையாக தேவைப்படுகிறது" என தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான  விஜய் தெரிவித்துள்ளார். 



பரந்தூர் திருமண மண்டபத்திற்கு அருகில் பொதுமக்களுடன் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 


இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "எனது கட்சியின் கொள்கைகளை மிக விரிவாகச் சொல்லியுள்ளேன். அதில், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 1000 ஏக்கர் நிலங்களை அழித்து, 13 நீர் நிலங்களை அகற்றும் திட்டத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினேன். இது மக்களுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும்" என அவர் தெரிவித்தார்.


அவர் மேலுமாக, "இந்த திட்டத்திற்கு எதிராக நமது விவசாயிகள் போராடுவதை நாங்கள் தடுப்போம். அவர்கள் பாதிக்கப்படுவதை நாம் காணாது விடுவோம்" என தெரிவித்துள்ளார்.


அத்துடன் "எல்லா உயிரினங்களின் வாழ்வையும் பாதிக்கும் இப்படி ஒரு திட்டம், மக்கள் விரோதமாக இருக்க வாய்ப்பு உள்ளது. நாம் வளர்ச்சியை எதிர்க்கவில்லை, ஆனால் அது மக்கள் நன்மைக்கே அமைவாக இருக்க வேண்டும்" எநாவும் அவர் தெரிவித்துள்ளார். 


இதே வேளை  பரந்தூர் விமான நிலையம் மற்றும் இதேபோன்ற திட்டங்கள், மக்களின் வாழ்வில் தீங்கு விளைவிக்கும். இவை நிறுத்தப்பட வேண்டும்" என அவர் வலியுறுத்தியா அவர்  "இந்த மண்ணுக்காக, மக்களுக்காக, விவசாயிகளுக்காக நாம் தக்க நடவடிக்கைகள் எடுக்கும்" என அவர் உறுதியளித்தார்.




Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top