ஆஸ்திரேலிய பயணத்தில் இந்திய அணிக்கு அதிர்ச்சி: ரோகித் சர்மாவின் உரை ரத்து

tubetamil
0

போர்டர்-கவாஸ்கர் கிண்ணத்தை கைப்பற்றும் முயற்சியில் தடுமாறும் இந்திய அணியின் மீது மேலும் ஒரு அடியாக, ஆஸ்திரேலிய பிரதமர் கிரிபில்லி ஹவுஸில் புதுவறுடை நிக்கவாக நடைபெறவுள்ள நிகழ்வில்  நடைபெறவிருந்த அணித் தலைவர் ரோகித் சர்மாவின்  உரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய அணியின் உள்நாட்டு செய்திகளில் இந்தச் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. மெல்போர்ன் டெஸ்டில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வீரர்களை கடுமையாக கண்டித்ததாக வெளியான செய்திக்குப் பின்னர், ரோகித் சர்மாவின் உரை ரத்து செய்யப்பட்ட செய்தி வெளியாகியுள்ளது.


இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், வீரர்களின் ஓய்வு அறையில் நடைபெறும் உரையாடல்கள் வெளியில் கசியும் நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளார்.


இந்தியா, எட்டு ஆண்டுகளில் முதல் முறையாக போர்டர்-கவாஸ்கர் கிண்ணத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளது. சிட்னியில் நடைபெறும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால்தான் இந்தியா தொடரை சமன் செய்ய முடியும்.


ரோகித் சர்மாவின் இந்த உரை ரத்து செய்யப்பட்டமையானது  அணியின் உள்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top