உள்நாட்டு கார் உற்பத்தி குறித்து வெளியிட்ட தகவல்!!

tubetamil
0

வெளிநாட்டில் இருந்து கொண்டு வரும் கார்களை விட நம் நாட்டில் சிறந்த கார்களை தயாரிக்க முடியும் என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுடன் போட்டியிடும் திறன் எமது உற்பத்தியாளருக்கு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில், அவர்களுடன் போட்டியிடும் திறன் நாட்டிற்கு இருந்தாலும் வெளிநாட்டு பொருட்களை பாதுகாக்கும் கொள்கைகளுக்கும், அந்த கொள்கைகளை பராமரிக்கும் அதிகாரிகளுக்கும் தான் போட்டி என அவர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு கார் உற்பத்தி குறித்து அமைச்சர் வெளியிட்ட தகவல் | Gov Announcement On Domestic Vehicle Production

மேலும், இலங்கைக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வரிக் கொள்கை தொடர்பில் நிதியமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top