முன்னாள் இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இன்று (10) களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு அவர் இராஜாங்க அமைச்சராக இருந்த காலத்தில், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் மீது தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இன்று விசாரணைகளுக்காக அவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
பிள்ளையான், காணி தொடர்பான விவகாரத்தில், நேர்முக உரையாடலின் போது சம்பந்தப்பட்ட அதிகாரியை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வழக்கு மீதான விசாரணைகளுக்காகவே அவர் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
வழக்கின் விசாரணை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.