தென்னை மரங்களை தறிப்பதற்கு முன்னர் அனுமதி பெறுவது கட்டாயம் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. இது குறித்து தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் பேச்சாளர் கூறுகையில், 2023 மரம் தறித்தல் சட்டத்தின்படி, தென்னை மரம் தறிக்க அனுமதி பெறுவது கட்டாயம் எனத் தெரிவித்துள்ளார்.
தென்னை மரம் தறிக்க விரும்புவோர் பிரதேச செயலாளர் மற்றும் தெங்கு அபிவிருத்தி சபை ஆகியவற்றிடம் அனுமதி பெற வேண்டும். உரிய அனுமதியின்றி தென்னை மரம் தறிப்பவர்களுக்கு 6 மாத சிறை தண்டனை மற்றும் மரம் ஒன்றுக்கு ஐயாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் பேச்சாளர் மேலும் கூறுகையில், அறியாமை காரணமாக பலர் அனுமதியின்றி தென்னை மரங்களை தறித்து வருவதாக தெரிவித்துள்ளார். எனவே, இந்த சட்டத்தை மக்கள் முழுமையாக அறிந்து பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.