வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ஒரு குடும்பஸ்தர், அங்கு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன்போது, தீருவில் வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த 49 வயதான சந்திரகுமார் சந்திரபாலன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
கடந்த சனிக்கிழமை, பருத்தித்துறை நகரில் மது போதையில் கண்டுபிடிக்கப்பட்ட அவர், பிடியாணை இருந்ததால் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். இரவு நேரத்தில், சந்திரகுமார் உயிரிழந்த நிலையில் வல்வெட்டித்துறை ஊரணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் பிரேத பரிசோதனையிற்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார். உடற்கூறு பரிசோதனையில் சில காயங்கள் காணப்படுவதால், அவர் பொலிஸ் தாக்குதலால் உயிரிழந்திருக்கலாம் என பலராலும் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்துவரும்கின்றது.