பிரபாகரனை உயிருடன் கொண்டு செல்ல முயன்ற மேற்குலக நாடுகள்!

tubetamil
0

 இலங்கை உள்நாட்டுப் போர் பல ஆண்டுகளாக நீடித்து வந்தது. இந்த போரில் விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசு ஆகிய இரண்டு தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர். இந்த போரின் உச்சக்கட்டமாக, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் பிடிக்க மேற்குலக நாடுகள் முயற்சித்தன. ஆனால், அவர்களின் முயற்சிக்கு மகிந்த ராஜபக்ச தடையாக இருததாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.



இது குறித்து இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர், 


போரின் இறுதிக்கட்டத்தில், பிரபாகரனை உயிருடன் கொண்டு செல்ல இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் முயற்சித்தன. இதற்காக அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால், மகிந்த ராஜபக்ச அவர்களின் கோரிக்கையை நிராகரித்தார். போரை எப்படியாவது முடிக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். மேற்குலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி அவர் போரை முடிவுக்கு கொண்டு வந்தார்.


1987 ஆம் ஆண்டு வடமராட்சி போரின் போது, இந்திய அரசாங்கம் தலையிட்டு போரை நிறுத்தியது. அப்போது ஜே.ஆர். ஜெயவர்தனே அரசாங்கம் வெளிநாட்டு அழுத்தத்திற்கு பணிந்து போரை நிறுத்தியது. ஆனால், மகிந்த ராஜபக்ச வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணியவில்லை. இதனால், மேற்குலக நாடுகள் மற்றும் தமிழீழ பிரிவினைவாத டயஸ்போராக்கள் அவரை பகைத்துக் கொண்டனர். என அவர் தெரிவித்துள்ளார். 


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top