யாழ்ப்பாணத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ஜுனா இளைஞர் ஒருவரை பீங்கானால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தற்போது இரு தரப்பு சமரசங்களின் அடிப்படையில் முடிவுக்கு வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு பாதிக்கப்பட்ட இளைஞனும், பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுனாவும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகி சமாதானமாக செல்ல விரும்புவதாக கூறினர்.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட இளைஞன் அளித்த புகாரின் அடிப்படையில் எம்.பி. அர்ஜுனா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த சம்பவத்தில் இரு தரப்பினருக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டதால் வழக்கு வாபஸ் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.