ஈழத்தில் சாதனை பெண்ணாக மாறியுள்ள ஓவியர் கேசனா இராசரத்தினம்.

tubetamil
0

 தனது ஆரம்ப கல்வி தொட்டு உயர்தரம்வரை வவுனியா விபுலானந்தா கல்லூரியில் மிகச் சிறப்பாக கற்றவர், தற்போது ஈழத்தில் சிறந்த ஓவியராக தன்னை மாற்றிக்கொண்டுள்ளார்.




ஈழத்தை பொறுத்தவரை தற்போது கலைத்துறையில் எம்மவர்களின் வளர்ச்சி சடுதியாக வளர்ச்சி கண்டு வருகிறது. பல் துறைகளிலும் எமது கலைஞர்கள் மிளிர்ந்து வருவது எம்மைப் பொறுத்தவரை பெருமையாகவே உள்ளது.



ஈழப்பரப்பையும் தாண்டி இந்தியா மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் பெயர் சொல்லுமளவிற்கு எமது கலைஞர்கள் வளர்ச்சி கண்டுள்ளனர்.அந்த வகையில் ஈழத்தில் தனது சொந்த முயற்சியால் சாதித்து வெற்றிகண்டுள்ள கேசனா இராசரத்தினம் அவர்களைப் பற்றித்தான் ஆராயவுள்ளோம்.


காலமும் கேசனாவை விட்டுவிடாமல் தன் கைபிடியில் அழைத்துச் செல்ல சற்று வளர்ந்தவள், தனது ஓய்வு நேரங்களை வீணாக்கிவிடாது சாதித்துவிட வேண்டுமென்ற எண்ணத்தில் ஓவியங்கள் வரைவதை தனது பழக்கமாக்கி கொண்டதால், பாடசாலையிலும் தனது கைவரிசையை காட்ட, ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் பாராட்ட துள்ளிக்குதித்து தனக்குள்ளே புளகாந்திதமடைந்த கேசனாவிற்கு, இவ்வாறான பாராட்டுகள் மேலும் தான் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை வலுவாக்கியது.  



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top