யாழில் பட்டதாரி மகள்களுக்கு திருமணமாகாததால் தந்தை எடுத்த விபரீத முடிவு.

tubetamil
0

 தனது இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் திருமணம் ஏற்படவில்லை என மனமுடைந்த தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் யாழ். மாவட்ட சங்கானை வைத்தியசாலை வீதியில் நேற்று (23) இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த  63 வயதுடைய தந்தையே உயிரிழந்துள்ளார்.


பட்டதாரிகளான இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் திருமணம் நடைபெறவில்லை என மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர் நேற்று (23) வீட்டில் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top