ஓமான் நாட்டில் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒமானின் மஸ்கட் பிராந்தியத்தில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் இவர்கள் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த கடையில் இருந்து திருடப்பட்ட இலத்திரனியல் பொருட்களுடன் திருட்டில் இலங்கையைச் சேர்ந்த 4 பேர் மற்றும் இந்தியாவை சேர்ந்த ஒருவர் உட்பட 5 பேரை ஒமான் பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து திருடிய பொருட்களையும் அதிகாரிகள் மீட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.