ஞானசாரதேரருக்கு மரண அச்சுறுத்தல்....!

tubetamil
0

 மட்டக்களப்பு ஏறாவூர் மசூதியொன்றில் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கும் துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதாக பொதுபலசேனாவின் ஞானசாரதேரர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய இஸ்லாமிய தீவிரவாதம் இலங்கையில் பரவுவது குறித்து சமீபத்தில் தான் தகவல்களை வெளியிட்டதை தொடர்ந்தே இந்த மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு இது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளேன் என தெரிவித்துள்ள ஞானசார தேரர், நாட்டில் தீவிரவாத நடவடிக்கைகள் மற்றும் மதபதற்றம் ஆபத்தான விதத்தில் அதிகரித்துள்ளதை இது வெளிப்படுத்துகின்றது என தெரிவித்துள்ளார்.

ஏறாவூரின் பாரம்பரிய முஸ்லீம் சமூகம் தீவிரவாத ஒடுக்குமுறை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனது உதவியை கோரியுள்ளது என தெரிவித்துள்ள ஞானசார தேரர்,  அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்கள் மத்தியில் உள்ள தீவிரவாத சக்திகள் குறித்து தகவல்களை வழங்கியுள்ளதுடன் இவற்றை பகிரங்கப்படுத்துமாறு கோரியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

லிபியா கடாபி குழு என்ற குழுவினர் வட்ஸ்அப் மூலம் அச்சுறுத்தும் செய்திகளை வெளியிட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏறாவூரை சேர்ந்த நபர் ஒருவரின் பெயரை வெளியிட்டுள்ள ஞானசார தேரர்,அவர் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார், பாதுகாப்பு படையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் ஏறாவூர் சுபி சங்கத்தின் செயலாளர் தீவிரவாத நடவடிக்கைகளை எதிர்ப்பவர் அவர் என்னை தொடர்புகொண்டு ,அமைதியை விரும்பும் முஸ்லீம்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல் குறித்து பேசினார் என தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top