யாழ்.நல்லூரில் சர்ச்சைக்குரிய அசைவ உணவக விளம்பரப்பலகை அகற்றப்பட்டது.

tubetamil
0

 யாழ். நல்லூர் ஆலய வீதியில் திறக்கப்பட்ட அசைவ உணவகத்தின் முன்னால் வைக்கப்பட்டிருந்த அனுமதியற்ற விளம்பரப்பலகை அகற்றப்பட்டுள்ளது.

பாரிய சர்ச்சையை கிளப்பி இருந்த குறித்த உணவகத்தின் விளம்பரப்பலகை இன்றைய தினம் யாழ்ப்பாணம் மாநகர சபையினால் அகற்றப்பட்டுள்ளது.




யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோயில் அருகே திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூடுமாறு வலியுறுத்தி ஆலய பக்தர்களிடம் சேகரிக்கப்பட்ட கையெழுத்துக்களடங்கிய மகஜர் யாழ் மாநகர சபை ஆணையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஆலய பக்தர் ஒருவரின் தன்னார்வ முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட கையெழுத்து சேகரிப்பு நடவடிக்கையில் 450ற்கும் மேற்பட்டவர்கள் தமது கையொப்பங்களை பதிவு செய்தனர். 

குறித்த கையொப்பங்கள் அடங்கிய மகஜர் யாழ் மாநகர சபை அலுவலகத்தில் வைத்து மாநகர சபை ஆணையாளர் கிருஷ்ணேந்திரனிடம் இன்று (21) கையளிக்கப்பட்டது.

இதன்போது சிவகுரு ஆதீனத்தின் தவத்திரு வேலன் சுவாமிகள் உள்ளிட்ட சைவ சமய ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

குறித்த மகஜரின் பிரதிகள் வடக்கு மாகாண ஆளுநர், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர், நல்லூர் பிரதேச செயலாளர், இந்து கலாசார திணைக்கள பணிப்பாளர் ஆகியோருக்கும் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top