முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக, கடந்த அரசாங்கத்தின் போது சீன நிறுவனமொன்றிடமிருந்து தரமற்ற கரிம உரக் கப்பலை நாட்டிற்கு இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் கடந்த 16ஆம் திகதி அமைச்சருக்கு நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து முன்னாள் விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே இன்று (19) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
இந்நிலையில் மஹிந்தானந்த அளுத்கமகேவை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் போது சீன நிறுவனமொன்றிடமிருந்து தரமற்ற கரிம உரக் கப்பலை நாட்டிற்கு இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் கடந்த 16ஆம் திகதி அமைச்சருக்கு நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்படுவதை தவிர்க்கும் வகையில் முன்பிணையில் செல்ல அனுமதிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, கடந்த14ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இவ்வாறான பின்னணியில் முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் சற்று முன்னர் முன்னிலையாகியுள்ளார்.
மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணைகளை இன்று (19.05.2025) மேற்கொள்ளுமாறு அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் சீராக்கல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.