வடக்கு, கிழக்கில் இராணுவத்தை அகற்றினால் பெரும் ஆபத்து.

tubetamil
0

வடக்கு மற்றும் கிழக்கில் தற்போது பாதுகாப்பு ஏற்பாடுகளில் பல குறைபாடுகள் இருப்பதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka) தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய தனி


ப்பட்ட நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு இடங்களில் இராணுவ முகாம்களை அகற்றுவதையும் யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி உயர் பாதுகாப்பு வலயம் வழியாக செல்லும் வீதியை திறப்பதையும் இராணுவ சீருடையில் இருந்த ஒருவனாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அத்துடன், இராணுவத்தை முகாம்களுக்குள் அடைத்து வைப்பது ஆபத்தானது என்றும், வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்தோர் யாழ்ப்பாணத்தில் பத்து தற்கொலை குண்டுதாரிகளை உருவாக்கும் திறன் கொண்டவர்கள் அல்ல என்று நினைக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு உருவாக்கப்படும் பயங்கரவாதிகள் சஹாரனை போல தாக்குதல்களைத் தொடங்கினால், நூற்றுக்கணக்கான முகாம்கள் மீண்டும் நிறுவப்பட வேண்டியிருக்கும் என்றும், அத்தகைய நிலைமை ஏற்படுவதை முன்கூட்டியே தடுக்க வேண்டும் எனவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top