நுவரெலியாவில் இருந்து கண்டி நோக்கிச் சென்ற வான் ஒன்று றம்பொடை பகுதியில் நேற்று பிற்பகல் விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்தனர்.
அவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் மேலதிக சிகிச்சைக்காக கண்டி மற்றும் பேராதனை மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் வான் ஓட்டுநர் உட்பட 4 ஆண்கள், 10 பெண்கள் மற்றும் 6 சிறுவர்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்களில் ஒரு பெண் மற்றும் இரண்டு சிறுவர்கள் கொத்மலை மருத்துவமனையிலும், மீதமுள்ளவர்கள் கம்பளை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
காயமடைந்த நிலையில் கம்பளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று பெண்கள் கண்டி பொது மருத்துவமனைக்கும், ஒரு குழந்தை பேராதனை மருத்துவமனைக்கும் மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர்.
இந்தக் குழு ராஜாங்கனை பகுதியிலிருந்து பதுளை பகுதிக்கு சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
கொத்மலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 11ஆம் திகதி கொத்மலை - இறம்பொட பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் அந்தப் பகுதிக்கு அண்மித்த பிரதேசத்தில் நேற்றையதினம் மற்றுமொரு விபத்து சம்பவித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.