கொழும்பு கடற்கரையோரமாக மிகவும் தாழ்வாக பறந்த புதிய ஏர்பஸ் விமானம்.

tubetamil
0

 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் இணையும் புதிய ஏர்பஸ் A330-200 விமானம் இலங்கையை வந்தடைந்துள்ளது.

கொழும்பு கடற்கரைக்கு மேலாக குறித்த விமானம் பறந்து செல்லும் காட்சியை பலரும் பார்வையிட்டுள்ளனர்.


பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் இருந்து A330-200 wide-body என்ற ஏர்பஸ் விமானம் இலங்கையை வந்துள்ளது.

குறித்த கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்க முன்னர், மிகவும் தாழ்வாக கொழும்பின் கடற்கரையோரமாக பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.


அதற்கமைய இன்று காலை 9.40 மணியளவில் கொள்ளுப்பிட்டி - பாணந்துறை கடற்கரை அண்டிய பகுதியில் பறந்து சென்றுள்ளது.

எனினும் பலரும் எதிர்பார்த்தளவுக்கு பாரியளவிலான விமானத்தை பார்வையிட முடியவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர். 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top