ஆசிரியராக விரும்புவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!!

Editor
0

 

பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது

இதற்கான போட்டிப் பரீட்சை உரிய காலப்பகுதியில் நடத்தப்படும் என அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த விடயத்தை கல்வி அமைச்சு (Ministry of Education) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.  



வயதெல்லையில் திருத்தங்கள்

விடயத்துடன் தொடர்புடைய வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், விசாரணைகள் நிறைவு பெற்ற பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தொழில்கோரும் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளும் போது, விண்ணப்பதாரர்களின் வயதெல்லையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய வயதெல்லையை நீடித்து, தற்போது ஆசிரியர் சேவையின் அனைத்து வெற்றிடங்களையும் நிரப்பத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top